Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Friday, 27 October 2017

என் மனம் கவர் கள்வன்

என் மனம் கவர் கள்வன் – அவன்
ஒன்றா இரண்டா சொல்வதற்க்கு….
என் காதலன் கவிஞன் என்பதா..
என் மனம் கவர்ந்த
இசைஞானியை சொல்வதா..
என் நண்பன் ஓவியன் என்பதா..
ஆயின் என் தோழன் பேரரசன்??
எவனைச் சொல்ல, எவனை விட..
காதலிக்கும் மனமிருந்தால்
காதலனுக்கா பஞ்சம்..

Thursday, 26 October 2017

பொருத்தம்!

நான் வடக்கென்றால் நீயோ கிழக்கெங்கிறாய்
நான் நிலவென்றால் நீ சூரியன் என்கிறாய்
நான் வேண்டுமென்றால், நீ வேண்டாம் என்கிறாய்
எனக்கு சிரிப்பு வரவழைக்கும் விஷயங்கள்
உன்னை ஏனோ சிரிக்க வைப்பதில்லை..
எனக்கு அழகாய் தோன்றுவதேனோ
உன் கண்ணில் அழகாய்த் தெரிவதில்லை..
நான் உன்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம்
எனக்குக் என்றும் கிடைப்பதில்லை
உன்னை த்ருப்தி படுத்த நான் முனைவதெல்லாம்
ஏனோ உன்னை த்ருப்தி படுத்துவதில்லை
நான் போகலாம் என்று சொல்வதற்கு முன்
நீ வேண்டாம் என்கிறாய்..
உன் எண்ணங்கள் வேறு, என் எண்ணங்கள் வேறு..
உனக்கும் எனக்கும் அமைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ?
உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமுன்
நம்மை இணைக்கச் சொன்ன பத்து பொருத்தமோ!

அம்மா!

Happy Mothers Day!

அம்மா, பாசம் இல்லா இவ்வுலகில்
பாசத்தை ஊட்டியும்
நேசம் இல்லா இவ்வுலகில்
நேசத்தை காட்டியும் வளர்த்தாய்..
இரவிலும் பகலிலும்
எனக்கெனத் துடித்தாய்..
கனவிலும் நான் அழுதால்
திடுக்கிட்டு விழித்தாய்..
தூக்கம் வராது நான் தவித்தபோது,
உச்சி முகர்ந்து  உறங்கச் செய்தாய்
எந்த தவமும் நான் செய்யவில்லை
உன்னைப் பெறுவதற்க்கு..
நீயோ தவம் செய்தேன் என்றாய்
என்னைப் பெறுவதற்க்கு..
உனக்காக கண் விழிக்க,
உன்னைத்தான் தாங்கிக்கொள்ள
நான் நினைக்கும் நேரம்..
என் புரிதலின் வேளை... காலம் கடந்து விட்டது..
கடவுளுக்குத்தான் உன் மேல் எத்தனை ஆசை?
என்னை விட்டு பிரித்து விட்டான் சீக்கிரமே..
மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா, உந்தன் கருவறை!

Wednesday, 13 September 2017

உறவுகளும் நேசமும்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு உறவுகளிடமும்
உண்மையை தேடி தேடி
உண்மையான உறவென்று
எண்ணி எண்ணி
என்னிதயம் ஏமாற்றம்
கண்டு கண்டு
அனைத்தும் பொய் பொய்
என்றே எண்ணுகிறது..

வெறுத்து விடுகிறேன்
இறுதி வரை உறவுகள்
நிலைத்து நிற்பதில்லை..

கோபத்தில் ஏமாற்றங்களில்
வலிகளில் என்னையே நான்
வெறுத்துவிடுகிறேன் மொத்தமாய்..

சரியோ தவரோ
எனக்கான உறவுகளிடம்
உண்மையுடன் பழகுகிறேன்..

அதை என்னை சார்ந்த
உறவுகளிடம் எதிர் பார்ப்பதால்
ஏமாற்றம் காண்கிறேன்..

வெறுத்து விட்டேன்
இன்று மொத்தமாய்..
நேசத்தை, நேசிப்பதை..

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...