ஊகிக்க சொல்லாதே..
ஊகம் மிக எளிதன்று..
ஊகமெல்லாம் வேண்டாம்.. வேண்டாம்..
சொல்ல வேண்டியவை அனைத்தும் சொல்லிவிடு..
புராணங்கள் கூறும்படி ஆன்மா ஆனபின் தெரிந்துதான் என்ன பயன்?
அது பதில் கூறுவதைத்தான் அறிவதும் சாத்தியமா?
இருக்கும்போதே சொல்லிவிடு..
கவிதையாய் கசிந்துருகி,
கதையாய் கொட்டித் தீர்த்து,
வார்த்தைகளாய், வாசகமாய்,
பாட்டுக்களால் அல்லது மெட்டுக்களால்..
அடிக்கடி அள்ளித் தெளித்துவிட்டு போ!
போவது நம் கையில் இல்லை..
ஆயின் வாழ்வது நம் கையிலுண்டு..
வாழ்க்கையை வாழ்ந்து, ரசித்து பார்ப்போம், வா!
ஊகம் மிக எளிதன்று..
ஊகமெல்லாம் வேண்டாம்.. வேண்டாம்..
சொல்ல வேண்டியவை அனைத்தும் சொல்லிவிடு..
புராணங்கள் கூறும்படி ஆன்மா ஆனபின் தெரிந்துதான் என்ன பயன்?
அது பதில் கூறுவதைத்தான் அறிவதும் சாத்தியமா?
இருக்கும்போதே சொல்லிவிடு..
கவிதையாய் கசிந்துருகி,
கதையாய் கொட்டித் தீர்த்து,
வார்த்தைகளாய், வாசகமாய்,
பாட்டுக்களால் அல்லது மெட்டுக்களால்..
அடிக்கடி அள்ளித் தெளித்துவிட்டு போ!
போவது நம் கையில் இல்லை..
ஆயின் வாழ்வது நம் கையிலுண்டு..
வாழ்க்கையை வாழ்ந்து, ரசித்து பார்ப்போம், வா!
No comments:
Post a Comment