Friday, 27 October 2017

என் மனம் கவர் கள்வன்

என் மனம் கவர் கள்வன் – அவன்
ஒன்றா இரண்டா சொல்வதற்க்கு….
என் காதலன் கவிஞன் என்பதா..
என் மனம் கவர்ந்த
இசைஞானியை சொல்வதா..
என் நண்பன் ஓவியன் என்பதா..
ஆயின் என் தோழன் பேரரசன்??
எவனைச் சொல்ல, எவனை விட..
காதலிக்கும் மனமிருந்தால்
காதலனுக்கா பஞ்சம்..

Thursday, 26 October 2017

என் தோழி எனும் தாய்

தோழி என்ற வார்த்தையிலே
தோழமை மட்டும் அல்ல
அங்கு தாய்மையும் கலந்து உள்ளதென
காணக் கிடைக்கப் பெற்றிருந்தேன் ..

நேரத்திற்கு சாப்பிடு..
நிம்மதியாய் தூங்கி எழு..
உடல்நிலை என்றும் பத்திரமாம்..

வார்த்தைகள் யாவும் இனியவையாய்
என் தாயின் வாய் வழி கேட்ட பின்
நான் காணப் பெற்றது
என் தோழியின் கடிதத்தில்..

என் கனவு இங்கே மெய்ப்பட
அங்கே கட்டளை இட்டாள் கடவுளிடம்
என் எண்ணம் யாவும் ஈடேற
வேண்டிக் கொண்டாள் இறைவனிடம்

பார்த்துப் பழகிக் கிடைத்த நட்பே
பாழாய்ப் போகும் இக்காலம்
இப் பேதை பெண்ணின் நட்போ
எனக்கு வேண்டும் எக்காலும்..

அறியாப் பருவக் காதல்

அறியாப் பருவத்தில் முதல் முறை
அறியாது வரும் உணர்வு!
உன் மனம் என்னும் வலைத் தன்னில்
விண்மீனாய் நான் மாட்டுவது!
புரிகின்ற பருவத்தில் புரிந்தும்
புரியாமல் உன்னை நெருங்குவது!
வழி மேல் விழி வைத்து நீ
வருவதை எதிர்ப்பார்ப்பது ! 
உன்னை தூரத்தில் கண்டவுடன்
நண்பர்களை ஓட ஓட வீரட்டுவது!
உன்னிடம் எத்தனையோ பேசத் துடிப்பது!
உன்னை எதிரில் பார்த்தாலோ
பேசாமல் ஊமையாவது!
பதில் அறிய கேள்வியுடன்
என் காதல் கடிதம் நீட்டுவது!
அதை வாங்கி நீ உன் நெஞ்சுக்கு
அருகினில் வெட்கத்தோடு புதைப்பது!
அதை கண்டு காதல் மிகுதியால்
போதையொடு நான் தடுமாறுவது!
இந்த காதலில் தான் எத்தனை சுகங்கள்..
இன்னும் எத்தனை நாள் தான் நானும்
இவ்வாறு உன் நினைப்பில் வாழ்வது??

Roller coaster rides

In the darkness of my room,
As I ponder through the night,
Silence rings deeper into my ears,
Now provided with the time in my life,
As I think on all the years gone by..
Emptiness fills the air of the room,
Calmness has consumed my mind,
Leaving me without a care..
As there is no path laid before me,
I aimlessly wander these grounds,
Desperately seeking a sense of purpose,
I continue my search for one to be found..
I see my past, right in my mind’s eye
So many choices, so many mistakes,
More pain, less gain, more losses,
Even lesser love, poorer health,
Too little happiness, so many sorrows,
Many giggles, childish fun, playful times,
Do I change anything, I ask?
Nothing my friend, says my Soul..
“Life is all about ups and downs
Enjoy your roller coaster rides”.

எப்பொழுது ரசிக்கத் துவங்குவாய்?

நீ எழுதுகிறாய்
நான் ரசிக்கிறேன்
நீ பேசுகிறாய்
நான் கேட்கிறேன்
நீ சிரிக்கிறாய்
நான் இனிக்கிறேன்
நீ கவிதையை ரசிக்கிறாய்
நான் உள்ளுக்குள் இசைக்கிறேன்
நீ சங்கீதத்தை ரசிக்கிறாய்
நான் ராகமாகத் துடிக்கிறேன்
உன்னை ரசிக்கும் என்னை
நீ எப்பொழுது ரசிக்கத் துவங்குவாய்?

Miss you, my love, my dad

Dad, you taught me to be strong
Sorry I’m letting you down…
I can never be strong enough...
Accepting that you are gone..

I was the apple of your eye..
You were the balm to my soul..
Now that you have left me and gone
There is no one to smile at me..

When I’m fighting with myself..
Those priceless smiles;
Those unconditional love..
There is no soul like you for me..

I won’t immortalise you in the stars...
Because they fade away...
I won’t remember you with a poem..
For it will be forgotten one day...
I will just keep you safe in my heart..
This way you are with me in every way.. 

Moving on!

As I was losing interest in many things;
All the ones that gave me pleasure once..
Seemed so dull all at once;
You came into my life like a breath of fresh air;

And we bonded well through the one I love..
Love for music connected us..
We played music in unison..
You with your intricacies..
Me sharing the beauty of lyrics..
Music sounded even more beautiful..

I came to you the hour I was in pain
Looking for answers, I cried to you in vain.
I shared many skeletons hiding in my heart..
When I needed outstretched hands,
You opened up your heart
And opened up the door..
I knew then, you'd be my friend for life..

As time flew, the air grew thick;
I saw our friendship fading;
My heart grew sicker & thicker..
I never put conditions..
I just let you be..
But someone did..
So restrictive she got..
You danced to her tunes..
Demonish side started to surface..
You made your choice very clear..
I now realise the end is near..

When it's time to say goodbye..
Now I sit all alone, deep in thoughts..
Reminiscing the past that's blown...
Wondering why can't I move on,
Just the way you did.. 

Is it too late?

Oh my friend!
Where did we go wrong?
What did you do wrong?
Rather what didn't I do?
Now we may go our separate ways..
Each with different lives to live...

The bond will always be there;
A friendship so well intact;
The parting time may be nearing..
The pages of time, we might not turn back.

If you leave me for good
I will always be a friend to you
Always wonder how you are;
Only praying for your wellness..

The smiles you brought to my face;
Happiness you gave me through music;
The love for literature we shared;
The historical notes we exchanged;
The way we inspired each other..
I will always remember & cherish all..

If I could turn back the clock now..
I'll apologise happily to you..
All the things I have said & done..
No ego there, my dear friend..
For you are more precious than ego..
I'll forgive you for all your tantrums..
Alas, if only I could..

Sometimes on your busier days
When you have thousand things to do;
Please let me glide slowly into your mind
All I want is to spend some time with you..

In those quiet moments..
When you are surprised to find me there...
Just remember, even in the distance between us
I am still someone who loves & cares for you.. 

Place in my heart

Sometimes you enter my life
Sometimes you storm, Oh yes..
We talk; we interact
We exchange experiences
We have very few in common
With some, many in common
We stay acquaintances
We sometimes become close
Or we may maintain distances
One thing for sure
Once you walk in or storm in
However you choose to enter
All the way into my life
Be it an acquaintance, a close friend
You have an unique place
All in my heart, irrespective..
You may cherish me
You may throw me
You may treasure me
You may leave me..
But once in my heart,
I'll never let you leave
You have your unique place,
A place none can replace.. 

சமர்ப்பணம்

Subramanya Bharathi! My Idol! My Hero! 

He is my inspiration on many counts along with Ramalinga Adigal, Thiruvalluvar & Maestro Ilayaraja. It is a pity that we lost such a visionary at a young age. He would have inspired the younger generation in India, who in turn would have made a better India. 

He was born in a land of paradoxes, a land where arrogance and humility, cruelty and kindness march together, a land of some dazzling ideas and millions of mute people, a land where there is courage as well as fear, the land of faith as well as despair. 

What was he like? 

I’d describe him to that of a wind, powerful at times like a twister, but gentle like a breeze that caresses the senses. He was like no other; A man who was bold, fearless, sensitive, respectful, nurturing, at the same time, a bit eccentric, from what I gather.

He worshiped nature, respected, and penned poems on it. 

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

Bharathi is considered to be an adversary for women & their rights in the society. He advocated their rights to education. He visualised a modern India where men and women were deemed equal. 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

Bharathi’s patriotism & his love for his motherland were undisputable. He passionately dreamt of the day his country would lead the world in culture, trade, literature and every other aspect of life. He penned those dreams in living words.

நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப் பன்மை யிலேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு

He believed strongly that any religion should not be priest-crafted; He wanted to push aside the priest so that the teacher can get a place, well deserved. It should make people realise new truth and take a new path. He strived to release the people from the clutches of the Astrologer, and place Astronomer before them. 

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம்

He fought with courage. Though he left us before he saw his 39th birthday, he left an armoury of thoughts, enough for the successful generations to flourish.

நாட்டின் நிலைமையை முன்பே உணர்ந்த தீர்க்கதரிசியே! உன்னால் இந்நாட்டை காப்பாற்ற முயலாது என உணர்ந்து முன்னமே உயிர் நீத்தாயோ!

புன்னகை

பொன் நகை விரும்பும்
பல கோடிப் பெண்கள் மத்தியில்
புன்னகை மட்டும் வேண்டுகிறாள்
ஒரு பேதைப் பெண்!!

Drifting Apart?

At first we were strangers
Until we became closer
We prided ourselves to be soul mates
But time flowing like a river
It became complicated, oh so faster
Until we started drifting further
I have changed so much since I met you
With little expectation that you change too
Why can't I be myself around you?
You want me to contain myself
Don't you realise that's expectation too?
I, now watch my words, at times don't know what to say
All I want is to get away from the stress of my life
I want to act silly and have few laughs sometimes too
For life is too short, my friend..
Friends are to let you act silly
I know you tell me to grow up
I can have deep & meaningful conversations too
Many common interests I share only with you
We can converse endlessly on those topics
But don't you think that can be boring too?
Allow me let my hair down, oh dear friend
Don't be judgemental
Allow me to be silly too
Bring out the kid, teen in you
You'll enjoy being one too
Something is stopping you
I know your restrictions are stopping me
I know we still care for each other
Is our friendship slowly fading in the air?
Oh God! Please don't let it happen
For it will be so unfair
Can "our past" be also called "our future?"
I don't want to surrender the sweet memories yet


The ones we have so dearly shared

அழகி

கார் மேகம் அழகென்பர்..
கருங்கூந்தல் அழகென்பர்..
யார் என்னை புகழ்வதிங்கே...
என் மேனி கறுப்பழகை?

கருங்குயிலும் அழகென்பர்..
காக்கை நிறமும் அழகென்பர்..
உருக் கறுத்த என் அழகை
உயர்த்திப் பேச எவருண்டு?

கரடியை பார்த்தல் அழகென்பார்..
யானை நிறமும் அழகென்பார்..
நிறம் கறுத்த என் அழகை
நினைத்துப் பார்க்க எவருண்டு?

கண்ணின் மணியே கருநிறம்தான்
தாயின் கர்ப்பப் பையும் கருநிறம்தான்..
கரும் பெண்ணை விரும்பி
ஏற்றுக்கொள்ள எவருண்டு?

கருப்பென்றாலும் நடிகனை வணங்கி
பால் அபிஷேகம் செய்வர் இந் நாட்டில்
நிறம் கறுத்த எனை மட்டும்
எள்ளி நகையாடுவது ஏனிங்கு?

நடிகன் ஒருவன் வெண்மை ஆவாய்
என ஒரு களிம்பு விளம்பரம்
செய்வதை நம்பி அதை வாங்கி பூசி
எனை எள்ளி நகையாடுவது ஏனிங்கு?

பளிங்கு போல் இருக்கும் நடிகைக்கு
கோயில் கட்டும் இக்காலத்தில்
கார் மேகம் போலிருக்கும் அழகி
எனக்கு வாழ்க்கை அமைவது எவ்வாறு?

தாய் ஒருத்தி கறுமையாய்
இருக்கும் போது அவள் மகனுக்கு
அசிங்கமாய் தோன்றும் இங்கே
எனை மணக்க வரும் ஆண்தான் எங்கே?

கறுப்பைக் கண்டு ஒதுக்காதே...!
நீ வணங்கும் கடவுள்கூட கருப்பன்தான்..

உனக்கு இணையாய் படித்த எனைக் கண்டு
பொறாமை கொண்டா நீ என்னை
திருமண சந்தைக்கு நான் வரும்போது
எனை கண்டு எள்ளி நகையாடுகிறாய்?

பெண்கள் மறுக்கும் காலம் இல்லை வெகு தூரத்தில்
அப்பொழுது எங்களின் கார் வண்ணம்
பெரிதாக தோன்றாது - என
நான் போட்ட கணக்கு பொய் ஆகாது

கேள்வி ஒன்று நான் கேட்கிறேன்
பதில் நீ கூறு எனக்கிங்கு..
அப்போது கரும் ஆண் சிசு பிறந்தால்
எவ்வாறு நீ கரையேற்றுவாய்?

Photo courtesy by amazing artist called Elayaraja who paints Dravidian beauties. http://elayarajaartgallery.com/index.php.

போதும், போதும்

கனிவானதொரு சொல்லோ,
குயிலினும் இனிய குரலோ,
மீனோடு போட்டி போடும் உன் நீண்ட கண்களோ
அதில் தீட்டிய மையோ,
நேசம் துளிர்க்கும் பார்வையோ,
கடலில் மூழ்கி முத்தெடுத்து,
கோர்த்தது போல் வெண் பற்களோ,
சில்லறைகள் போல் சிதறும்
உன் கொல்லென்ற உன் சிரிப்போ
கரு நாகம் போல் உன் கூந்தலோ,
அதை அலங்கரிக்கும் பூக்களோ
போதுமடி உன்னை நான் காலமெல்லாம் நேசிக்க..

முதற் காதல்

அறியா பருவத்தில் அவனைக் கண்டேன்
கண்டதும் காதலுற்றேன்;
என்னுள்ளில் ஏதேதோ மாற்றங்கள் அவனால்
அவன் வரும் வழிமேல் விழி வைத்து
வண்டிச் சத்தம் கேட்டுக் காத்திருந்து
கிடப்பதன் சுகமே தனி
காதல் ஒரு சுகமான வலி..
காதலுற்ற போது அதன்
சுகம் ஒரு வலி என்றால்
உன்னை விட்டு பிரிந்தபோது,
சோகம் வேறு வித வலி எனக்கு
பிரிந்த பின்பும் உன்னுடைய
நினைவுகளை அழியவில்லை..
காலங்கள் கடந்தன..
வாழ்க்கை சக்கரம் சுற்றின..
இன்றும் கூட்டத்தில் உன்னைத்
தேடுகின்றன என் கண்கள்..
ஆனால் உன்னை கண்டால் மறுபடி
காதல் துளிர்க்குமா,
வார்த்தைகள் வெளிவரத் தடுமாறுமா?
நீ மறந்திருப்பாயோ என்னை??

அமைதி!!

ஓ! அமைதியே!
உன்னைத் தேடி நான் அழுதேன்
திக்கற்ற பறவையாய் திரிந்தேன்
கடலைக் கடந்து
மலையில் நடந்து
மழையில் நனைந்து
வெய்யிலில் எறிந்து
காற்றில் கரைந்து
தேடிச் சலித்து
உன்னைக் காணாது திருப்பி
மூலையில் ஒடுங்கினப்போது
சட்டென்று பிடிபட்டாயே
எங்கெங்கோ தேடின நீ
எங்கேயும் இல்லை
என்னுள்ளேதான் இருக்கிறாய் என்பது
இப்போதுதானே புரிந்தது

என் தாய் மொழியாம் தமிழ் மொழி

கடல் தாண்டி, நாடு விட்டு
வந்த பின்பும்
நடை, உடை, பாவனை மாறினும்
என்னிடம் மாறாதது எது?
அளவில்லா தாகமும்
மட்டற்ற காதலும்
நான் கொண்டிருக்கும்
என்னிலே ஊனாகி, உயிராகி
உதிரத்திலே ஒன்றான
அமுதுக்கும் நிகரான
தாய் மொழியாம்
பண் மொழியாம் – என்
மனதிர்க்கினிய தமிழ் மொழியே..

மழை – ஒரு பொக்கிஷம்

கார்மேகமும், வெண்மேகமும்
தழுவிக்கொள்ள,
வானுக்கும், பூமிக்கும் இடையே
மின்னல்கள் கோலமிட,
இடி ஒசை தாளமிட,
வண்ணமில்லா மழைத்துழிகள்
போட்டி போட்டு விழத் துடிக்க,
ஆதவன் மேகங்களுக்கு இடையே
ஒளிந்து கண் சிமிட்டி,
ஒளிகற்றைகளை வீச,
வானவில்லாய் வண்ணங்கள் விரிய,
பூக்களின் மீது பூ மழை தெளிக்க,
பரவசத்தினால் பூக்கள் பூரிக்க,
புல்வெளியின் மீது முத்து
நீர்த் திவலைகள் தேங்க,
உயிரினங்கள் உணர்ச்சி மிகுதியால்
சங்கீதம் பாட,
பூமித் தாய் உவகை உற்றாள்;
உள்ளம் குளிர்ந்தாள்;
மழையினால் தன் காயங்களுக்கு மருந்திட்டாள்;
தன் மேல் மழை நீரை
ஒடையாய் ஓட விட்டாள்..

Sydney 23rd Jan 2010

Sydney Sandstorm - 23rd Jan 2010
சூரியனின் கடுமைக்கு
ஆளான எமக்கு
கடல் அன்னை மருந்தளித்தாள்
காற்றின் நெருடலினால்

Autumn!

I have watched
The golden autumn pass by,
Lonely path at dawn
strewn with coloured leaves
carpeting the days bygone
soft white clouds
Punctuating the azure sky
Like a bunch of young children
Basking in their newly gained freedom
I hum a line or two
From the song,
That was once my favourite
Now, all the memories erased
With the sponge of time
The yellow leaf quivers, shudders
They joins the others,
Floating like a weightless, timeless
Wanderer in space
On the colourful carpet of the
Senile Autumn!

- a very old poem I wrote in my early teens.

அடி பெண்ணே

ஆண்களை கொடியவர்கள் என்று
குறை கூறும் பெண்ணே..
அறிவதில்லை என்றுமே நீ
பெண்களுக்கு செய்யும் கொடுமை
அதை விட கொடியதென்று..
பெண்ணே பெண்ணை மலடி, விதவை
என்றும் ஒதுக்குவதை பார்த்து
சிரிக்கிறது எங்கள் ஆண் வர்ககம்
என்னையா கொடியவன் எங்கிராய் பெண்ணே?
நான் கொடியவன் என்றால்
உன்னை விவரிக்க
வார்த்தைகள் கிட்டவில்லையடி எனக்கு..
நீ பெற்று வளர்த்தவன் தானே நான்?
எனக்கு பதில் சொல்லடி பெண்ணே..

வாழ்க்கை

சிறு வயதில்
ஓடி ஆட இடம் நிறைய
உற்ற நண்பர்கள் நிறைய
உற்றார் உறவினர் நிறைய
ஆசை நிறைய ….
இளம் வயதில்
கல்வி நிறைய
காதல் நிறைய
சலனம் நிறைய
முன்னேற, முயற்சி நிறைய…
நடு வயதில்
வேலை நிறைய
முன்னேற்றம் நிறைய
கடன் நிறைய
கடமை நிறைய…..
முது வயதில்
வங்கியில் பணம் நிறைய
உடம்பில் வியாதி நிறைய
தனிமை நிறைய
ஆதரவுக்கு ஏக்கம் நிறைய….
வாழ்வில் வேண்டும்
பரந்த மனம் நிறைய
குணம் நிறைய
திருப்தி நிறைய
மகிழ்ச்சி நிறைய
புரிந்தது அவனுக்கு
அவன் மேல் மண் நிறைய…

எனதுயிர் பாரதியே!

பத்துப் பன்னிரெண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வர வேணும் – அங்கு
கத்துங்க் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல்வர வேணும்..
இப்படி வர்ணித்துப் பாடிய எனதுயிர் பாரதியே!
இப்பொழுது நீ இருந்தால் எப்படி இக்கவிதையை இயற்றிருப்பாய்??
இயற்கை அழிவு முன்னமே உணர்ந்த தீர்க்கதரிசியே!
இதனால்தான் முன்னமே உயிர் நீத்தாயோ??

நினைவலைகள்

இரண்டு பத்து வருடங்கள் கடந்தும்
உன் ஞாபகமே போகவில்லை
மனதில் தான் எத்தனை மௌன பூகம்பங்கள்
மனதின் பரப்பெங்கும் பீச்சியடிக்கும் ஓர் ப்ரவாகம்
இதயத்தின் ஆழத்தில் உன் முகம், உன் நினைவலைகள்..
உன் நினைவை மறக்கடிப்பதில் தான்
தூக்க மாத்திரை கூட தோற்றுப் போனதே..
மீண்டும் ஒரு முறை சந்திப்போமா?
அப்போது ஓர் கேள்வி..
நீயும் என்னை நினைத்தாயா?

யார் ஐயா நீ எனக்கு?

ஆதரவின்றி அழுதுக் கொண்டு
அனாதையாய் நினைக்கும்போது
ஆதரவாய் அணைத்துக் கொண்டாய்
எண்ணங்கள் வெள்ளம் போல்
கரை புரண்டு ஓடும்போது
அணையென நீ தடுத்தாய்
ஆரய்யா நீ?
வயிற்றினில் பட்டாம்பூச்சி
உதடுகளில் புன்சிரிப்பு
அதைக் காதல் என்றாய்,
அனுபவித்தேன் – என்
காதலனா நீ??
மனம்தான் சஞ்சலப்பட்டு
மௌனமாய் நின்றபோது
ஒரு நிலையில் எனை கொணர்ந்தாய்
துக்கம் அது தொண்டைதனை
அடைக்கும் வேளையில் துணையென
அருகினில் அமர்ந்தாய்
துணைவனா நீ??
கவிதை எழுதும் எனக்கு
உனை நினைக்க தூண்டினாய்
நாடினேன் கை பிடித்து உதவினாய்
ஓவியம் தான் நான் தீட்டும்போது
வர்ணங்களாய் நீ தோன்றினாய்
உன் பாடல்களால் எனை
சாந்தப் படுத்துகிறாயே
எனது யோகியா நீ?
பயம் என்னை நெருங்கும்போது
கை கொடுத்தாய், மற்றும்
க்ரோத கசடுகள் எல்லாம்
நெருங்கா வகையில் செய்தாய்
உலகின் அழகை நான் இங்கு – இரு
கண்களால் ரசிக்கும் வேளையில்
அருகிலிருந்து பல கோடி கண்களால்
அணு அணுவாய் ரசிக்கச் செய்தாய்
படைத்தவனை உணரச் செய்தாய்
யார் ஐயா நீ எனக்கு?
கவியா? புலவனா? படைப்பாளியா?
காதலனா? துணைவனா?
ஒருபோதும் துணையாய் நிற்கும்
நீ எனக்கு கண்காணா
தெய்வமா நீ? ராக தேவனா நீ?
ராஜ ராஜனா நீ? இளைய ராஜனே
யார் ஐயா நீ எனக்கு??


கால வெள்ளம்

காலங்கள் செல்லத்தான்
மனித உள்ளங்கள் மாறுமே
அன்பும் கூடவே
மாறித்தான் போகுமோ?
சில நொடிகளில் வாழ்ந்தோம்
பல யுகங்களை கடந்தோம்
பல வருடங்கள் சென்று
உன்னை நினைத்தேன்…
கால வெள்ளம்
ஓடுதம்மா…
உன்னோடு பேசிய
அன்பு வசனத்தை
நினைத்தேன்…
கண்­ணீராய் பெருகிய
ஆனந்தமதில் நனைந்தேன்…
எந்தன் உள்ளத்தில்
ஓர் உற்சாகம்
உண்டானதே…
காலங்கள் தாண்டிவந்து
எனை ஈர்த்தாய்
எண்ணத்தில் தோன்றி
எனைக் கொன்றாய்…

கவியரசே!

எனது எழுத்தாணிக்குத் தகுதி இல்லை
உமது தொகுப்புகளை விரிவுரைக்க…
எனக்கு இரு கண்கள் போதவில்லை
உம் எழுத்துக்களை படிக்க…
என் வாயிற்கு வார்த்தைகள் கிட்டவில்லை
உன் தமிழாற்றலை விவரிக்க..
இரு செவிகளுக்கு அலுப்பில்லை
அய்யா நின்றன் கவிதைகளை ரசிக்க…
தமிழில் வரிகள் இல்லை உன் கவிதைகளை வர்ணிக்க…
கவியரசே! தமிழின் முத்தே!
உம்மால் என்றென்றும் அழிவில்லை தமிழுக்கு..

Kannadasan

கண்ணாடி!

உனைக் கண்டேன், காதல் கொண்டேன்
நீ எனை கண்டாய், காதல் கொண்டாய்..
என் தலை கிறுகிறுத்ததே..
உனக்காக என் அழகுக்கு அழகு சேர்த்தேன்…
நீயும் என் அழகுக்கு அழகு சேர்த்தாய்..
உன் மேல் பித்தாகிப் போனேன் நானே..
ஒரு நாள் அவளைக் கண்டாய்
காதல் கொண்டாய்..
அவள் அழகாய் தெரிந்தாள் என்னை விட..
பித்தானேன், புழுவாய்தான் நான் துடித்தேன்..
என்தன் தலை கிறுகிறுத்தது..
போட்டுடைத்தேன் உனை நானே..
எனதருமைக் கண்ணாடியே!!!

அழகியே!

உன்னைப் பார்த்தேன், காதல் துளிர்த்தது
உன்னை நினைத்தேன், பாலும் கசந்தது
உன்னோடு இருந்த நாட்கள் எல்லாம்
பசியில்லை, தூக்கம் இல்லை
ஆயின் நினைவுகள் பசுமரத்து ஆணிதானடி..
பதிந்தது என் நெஞ்சில்..
உலகம் அழகு, ஏனெனில் நீ அழகு..
நினைவுகள் அழகு, உன்னால் தானடி..
என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்
நெஞ்சம் வலித்தது அறிவாயோ??
இன்றும் நாம் சந்தித்த இடங்கள் எல்லாம்
அழகு தான், ஏனெனில் உன் கண் வழியே
நான் பார்த்த இடங்கள் அவை..
எனக்குள்ளே சிரிக்கிறேன்..
காதலையே காதலிக்க செய்த பெண்ணே..
அழகை ரசிக்கச் சொல்லிக் கொடுத்த அழகியே..
உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்..

நல்வரவு

கோடைக்காலத்தில் – என்னோடு
வாடிக் களைத்து
நிழலில் இளைப்பாரி
குளிர்க்காலத்தில் – என்னுடன்
குளிர் காய்ந்து
எனக்கு இதமளித்து
என் வாழ்க்கைக்கு அர்த்தம்
அளிக்க வந்தவளே!
உன் வரவு நல்வரவாகுக..

பொருத்தம்!

நான் வடக்கென்றால் நீயோ கிழக்கெங்கிறாய்
நான் நிலவென்றால் நீ சூரியன் என்கிறாய்
நான் வேண்டுமென்றால், நீ வேண்டாம் என்கிறாய்
எனக்கு சிரிப்பு வரவழைக்கும் விஷயங்கள்
உன்னை ஏனோ சிரிக்க வைப்பதில்லை..
எனக்கு அழகாய் தோன்றுவதேனோ
உன் கண்ணில் அழகாய்த் தெரிவதில்லை..
நான் உன்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம்
எனக்குக் என்றும் கிடைப்பதில்லை
உன்னை த்ருப்தி படுத்த நான் முனைவதெல்லாம்
ஏனோ உன்னை த்ருப்தி படுத்துவதில்லை
நான் போகலாம் என்று சொல்வதற்கு முன்
நீ வேண்டாம் என்கிறாய்..
உன் எண்ணங்கள் வேறு, என் எண்ணங்கள் வேறு..
உனக்கும் எனக்கும் அமைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ?
உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமுன்
நம்மை இணைக்கச் சொன்ன பத்து பொருத்தமோ!

அம்மா!

Happy Mothers Day!

அம்மா, பாசம் இல்லா இவ்வுலகில்
பாசத்தை ஊட்டியும்
நேசம் இல்லா இவ்வுலகில்
நேசத்தை காட்டியும் வளர்த்தாய்..
இரவிலும் பகலிலும்
எனக்கெனத் துடித்தாய்..
கனவிலும் நான் அழுதால்
திடுக்கிட்டு விழித்தாய்..
தூக்கம் வராது நான் தவித்தபோது,
உச்சி முகர்ந்து  உறங்கச் செய்தாய்
எந்த தவமும் நான் செய்யவில்லை
உன்னைப் பெறுவதற்க்கு..
நீயோ தவம் செய்தேன் என்றாய்
என்னைப் பெறுவதற்க்கு..
உனக்காக கண் விழிக்க,
உன்னைத்தான் தாங்கிக்கொள்ள
நான் நினைக்கும் நேரம்..
என் புரிதலின் வேளை... காலம் கடந்து விட்டது..
கடவுளுக்குத்தான் உன் மேல் எத்தனை ஆசை?
என்னை விட்டு பிரித்து விட்டான் சீக்கிரமே..
மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா, உந்தன் கருவறை!

Wednesday, 18 October 2017

Deepavali

Deepavali! A Beautiful festival I used to look forward to, check in calendar, mark the date, start count down for visiting the only Grandmother's place in Coimbatore. 

I was the oldest of grand child at home every year then. My 2 younger cousins were so adorable. I would be there with my Amma few days ahead of time. My Pattu Paavadai would be ready, blouse perfectly stitched, matching hair clip or ribbon, nail polish to match the outfit (over a period I moved on to wearing dhavani and eventually got my first ever saree at the age of 13. That is a story in itself, saved for another time). 2 days ahead of time, fire crackers would be bought and ready - 2 shares, one from my Appa and another from my Chitappa. That, in itself was quite a lot for standard of those days. Despite that, we'd eagerly wait for the biggest of all, what our Mama would bring from Sivakasi. He'd get loads of them from there, due to his business with Sivakasi Lathe machinery. 

The day before, while our Paati would be busy with being a task master, Murukku Mami (an endearing help who’d come home to make bakshanams) busy making Kai Murukku and hot Jaangri, my Amma and Chithi busy with God knows what 😊, we, kids would be busy with the most important task, making deals, bargaining on already, equally, sorted fire crackers. The cousin who’s younger to me by 3 yrs, the middle one of us cousins, was scared of big ones like rockets, Atom bombs, Lakshmi Vedi, sara vedi etc.. would get all the chakkarams, busvaanams, in exchange for the biggies I’d get. My assistant, the youngest of cousins would keep them with him and share couple with an agreement that I stay with him, help him burst big ones. We would hardly sleep, waiting for our Paati to wake us up to put Oil on our head. Excitement starts mounting from those wee hours of the day. Then, my cousins would say, “Devi, seekram vaa di. Unakkaaga evvalavu neram wait pannaradhu”. Our domestic help would wash my, then, long hair with Shikaikaai, that would take for ages and then the drying process starts 😊. Though my cousins were boys, the fun I had with them, the beautiful times we shared each Deepavali are all etched so hard in my memory as if they happened yesterday. 

Once I got married, not a single Deepavali has ever been as memorable; needless to say, moving abroad, Deepavali became yet another working day in most cases. I stopped getting excited about Deepavali from the age of 18. Now, with my oldest grand kid getting to a stage of understanding things, I am going to make sweet, memorable moments this Deepavali. 

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...