ஆதரவின்றி அழுதுக் கொண்டு
அனாதையாய் நினைக்கும்போது
ஆதரவாய் அணைத்துக் கொண்டாய்
எண்ணங்கள் வெள்ளம் போல்அனாதையாய் நினைக்கும்போது
ஆதரவாய் அணைத்துக் கொண்டாய்
கரை புரண்டு ஓடும்போது
அணையென நீ தடுத்தாய்
ஆரய்யா நீ?
வயிற்றினில் பட்டாம்பூச்சி
உதடுகளில் புன்சிரிப்பு
அதைக் காதல் என்றாய்,
அனுபவித்தேன் – என்
காதலனா நீ??
மனம்தான் சஞ்சலப்பட்டு
மௌனமாய் நின்றபோது
ஒரு நிலையில் எனை கொணர்ந்தாய்
துக்கம் அது தொண்டைதனை
அடைக்கும் வேளையில் துணையென
அருகினில் அமர்ந்தாய்
துணைவனா நீ??
கவிதை எழுதும் எனக்கு
உனை நினைக்க தூண்டினாய்
நாடினேன் கை பிடித்து உதவினாய்
ஓவியம் தான் நான் தீட்டும்போது
வர்ணங்களாய் நீ தோன்றினாய்
உன் பாடல்களால் எனை
சாந்தப் படுத்துகிறாயே
எனது யோகியா நீ?
பயம் என்னை நெருங்கும்போது
கை கொடுத்தாய், மற்றும்
க்ரோத கசடுகள் எல்லாம்
நெருங்கா வகையில் செய்தாய்
உலகின் அழகை நான் இங்கு – இரு
கண்களால் ரசிக்கும் வேளையில்
அருகிலிருந்து பல கோடி கண்களால்
அணு அணுவாய் ரசிக்கச் செய்தாய்
படைத்தவனை உணரச் செய்தாய்
யார் ஐயா நீ எனக்கு?
கவியா? புலவனா? படைப்பாளியா?
காதலனா? துணைவனா?
ஒருபோதும் துணையாய் நிற்கும்
நீ எனக்கு கண்காணா
தெய்வமா நீ? ராக தேவனா நீ?
ராஜ ராஜனா நீ? இளைய ராஜனே
யார் ஐயா நீ எனக்கு??
No comments:
Post a Comment