ஓ! அமைதியே!
உன்னைத் தேடி நான் அழுதேன்
திக்கற்ற பறவையாய் திரிந்தேன்
கடலைக் கடந்து
மலையில் நடந்து
மழையில் நனைந்து
வெய்யிலில் எறிந்து
காற்றில் கரைந்து
தேடிச் சலித்து
உன்னைக் காணாது திருப்பி
மூலையில் ஒடுங்கினப்போது
சட்டென்று பிடிபட்டாயே
எங்கெங்கோ தேடின நீ
எங்கேயும் இல்லை
என்னுள்ளேதான் இருக்கிறாய் என்பது
இப்போதுதானே புரிந்தது
உன்னைத் தேடி நான் அழுதேன்
திக்கற்ற பறவையாய் திரிந்தேன்
கடலைக் கடந்து
மலையில் நடந்து
மழையில் நனைந்து
வெய்யிலில் எறிந்து
காற்றில் கரைந்து
தேடிச் சலித்து
உன்னைக் காணாது திருப்பி
மூலையில் ஒடுங்கினப்போது
சட்டென்று பிடிபட்டாயே
எங்கெங்கோ தேடின நீ
எங்கேயும் இல்லை
என்னுள்ளேதான் இருக்கிறாய் என்பது
இப்போதுதானே புரிந்தது
No comments:
Post a Comment