தோழி என்ற
வார்த்தையிலே
தோழமை மட்டும் அல்ல
அங்கு தாய்மையும் கலந்து உள்ளதென
காணக் கிடைக்கப் பெற்றிருந்தேன் ..
நேரத்திற்கு சாப்பிடு..
நிம்மதியாய் தூங்கி எழு..
உடல்நிலை என்றும் பத்திரமாம்..
வார்த்தைகள் யாவும் இனியவையாய்
என் தாயின் வாய் வழி கேட்ட பின்
நான் காணப் பெற்றது
என் தோழியின் கடிதத்தில்..
என் கனவு இங்கே மெய்ப்பட
அங்கே கட்டளை இட்டாள் கடவுளிடம்
என் எண்ணம் யாவும் ஈடேற
வேண்டிக் கொண்டாள் இறைவனிடம்
பார்த்துப் பழகிக் கிடைத்த நட்பே
பாழாய்ப் போகும் இக்காலம்
இப் பேதை பெண்ணின் நட்போ
எனக்கு வேண்டும் எக்காலும்..
தோழமை மட்டும் அல்ல
அங்கு தாய்மையும் கலந்து உள்ளதென
காணக் கிடைக்கப் பெற்றிருந்தேன் ..
நேரத்திற்கு சாப்பிடு..
நிம்மதியாய் தூங்கி எழு..
உடல்நிலை என்றும் பத்திரமாம்..
வார்த்தைகள் யாவும் இனியவையாய்
என் தாயின் வாய் வழி கேட்ட பின்
நான் காணப் பெற்றது
என் தோழியின் கடிதத்தில்..
என் கனவு இங்கே மெய்ப்பட
அங்கே கட்டளை இட்டாள் கடவுளிடம்
என் எண்ணம் யாவும் ஈடேற
வேண்டிக் கொண்டாள் இறைவனிடம்
பார்த்துப் பழகிக் கிடைத்த நட்பே
பாழாய்ப் போகும் இக்காலம்
இப் பேதை பெண்ணின் நட்போ
எனக்கு வேண்டும் எக்காலும்..
No comments:
Post a Comment