Thursday 26 October 2017

அழகி

கார் மேகம் அழகென்பர்..
கருங்கூந்தல் அழகென்பர்..
யார் என்னை புகழ்வதிங்கே...
என் மேனி கறுப்பழகை?

கருங்குயிலும் அழகென்பர்..
காக்கை நிறமும் அழகென்பர்..
உருக் கறுத்த என் அழகை
உயர்த்திப் பேச எவருண்டு?

கரடியை பார்த்தல் அழகென்பார்..
யானை நிறமும் அழகென்பார்..
நிறம் கறுத்த என் அழகை
நினைத்துப் பார்க்க எவருண்டு?

கண்ணின் மணியே கருநிறம்தான்
தாயின் கர்ப்பப் பையும் கருநிறம்தான்..
கரும் பெண்ணை விரும்பி
ஏற்றுக்கொள்ள எவருண்டு?

கருப்பென்றாலும் நடிகனை வணங்கி
பால் அபிஷேகம் செய்வர் இந் நாட்டில்
நிறம் கறுத்த எனை மட்டும்
எள்ளி நகையாடுவது ஏனிங்கு?

நடிகன் ஒருவன் வெண்மை ஆவாய்
என ஒரு களிம்பு விளம்பரம்
செய்வதை நம்பி அதை வாங்கி பூசி
எனை எள்ளி நகையாடுவது ஏனிங்கு?

பளிங்கு போல் இருக்கும் நடிகைக்கு
கோயில் கட்டும் இக்காலத்தில்
கார் மேகம் போலிருக்கும் அழகி
எனக்கு வாழ்க்கை அமைவது எவ்வாறு?

தாய் ஒருத்தி கறுமையாய்
இருக்கும் போது அவள் மகனுக்கு
அசிங்கமாய் தோன்றும் இங்கே
எனை மணக்க வரும் ஆண்தான் எங்கே?

கறுப்பைக் கண்டு ஒதுக்காதே...!
நீ வணங்கும் கடவுள்கூட கருப்பன்தான்..

உனக்கு இணையாய் படித்த எனைக் கண்டு
பொறாமை கொண்டா நீ என்னை
திருமண சந்தைக்கு நான் வரும்போது
எனை கண்டு எள்ளி நகையாடுகிறாய்?

பெண்கள் மறுக்கும் காலம் இல்லை வெகு தூரத்தில்
அப்பொழுது எங்களின் கார் வண்ணம்
பெரிதாக தோன்றாது - என
நான் போட்ட கணக்கு பொய் ஆகாது

கேள்வி ஒன்று நான் கேட்கிறேன்
பதில் நீ கூறு எனக்கிங்கு..
அப்போது கரும் ஆண் சிசு பிறந்தால்
எவ்வாறு நீ கரையேற்றுவாய்?

Photo courtesy by amazing artist called Elayaraja who paints Dravidian beauties. http://elayarajaartgallery.com/index.php.

No comments:

Post a Comment

UK - City of Bath

Bath was founded in 1 AD, and gained UNESCO World Heritage title. It is a small city, best explored by foot; it is filled with history and c...