கார்மேகமும், வெண்மேகமும்
தழுவிக்கொள்ள,
வானுக்கும், பூமிக்கும் இடையே
மின்னல்கள் கோலமிட,
இடி ஒசை தாளமிட,
வண்ணமில்லா மழைத்துழிகள்
போட்டி போட்டு விழத் துடிக்க,
ஆதவன் மேகங்களுக்கு இடையே
ஒளிந்து கண் சிமிட்டி,
ஒளிகற்றைகளை வீச,
வானவில்லாய் வண்ணங்கள் விரிய,
பூக்களின் மீது பூ மழை தெளிக்க,
பரவசத்தினால் பூக்கள் பூரிக்க,
புல்வெளியின் மீது முத்து
நீர்த் திவலைகள் தேங்க,
உயிரினங்கள் உணர்ச்சி மிகுதியால்
சங்கீதம் பாட,
பூமித் தாய் உவகை உற்றாள்;
உள்ளம் குளிர்ந்தாள்;
மழையினால் தன் காயங்களுக்கு மருந்திட்டாள்;
தன் மேல் மழை நீரை
ஒடையாய் ஓட விட்டாள்..
தழுவிக்கொள்ள,
வானுக்கும், பூமிக்கும் இடையே
மின்னல்கள் கோலமிட,
இடி ஒசை தாளமிட,
வண்ணமில்லா மழைத்துழிகள்
போட்டி போட்டு விழத் துடிக்க,
ஆதவன் மேகங்களுக்கு இடையே
ஒளிந்து கண் சிமிட்டி,
ஒளிகற்றைகளை வீச,
வானவில்லாய் வண்ணங்கள் விரிய,
பூக்களின் மீது பூ மழை தெளிக்க,
பரவசத்தினால் பூக்கள் பூரிக்க,
புல்வெளியின் மீது முத்து
நீர்த் திவலைகள் தேங்க,
உயிரினங்கள் உணர்ச்சி மிகுதியால்
சங்கீதம் பாட,
பூமித் தாய் உவகை உற்றாள்;
உள்ளம் குளிர்ந்தாள்;
மழையினால் தன் காயங்களுக்கு மருந்திட்டாள்;
தன் மேல் மழை நீரை
ஒடையாய் ஓட விட்டாள்..
No comments:
Post a Comment