உனைக் கண்டேன், காதல் கொண்டேன்
நீ எனை கண்டாய், காதல் கொண்டாய்..
என் தலை கிறுகிறுத்ததே..
உனக்காக என் அழகுக்கு அழகு சேர்த்தேன்…
நீயும் என் அழகுக்கு அழகு சேர்த்தாய்..
உன் மேல் பித்தாகிப் போனேன் நானே..
ஒரு நாள் அவளைக் கண்டாய்
காதல் கொண்டாய்..
அவள் அழகாய் தெரிந்தாள் என்னை விட..
பித்தானேன், புழுவாய்தான் நான் துடித்தேன்..
என்தன் தலை கிறுகிறுத்தது..
போட்டுடைத்தேன் உனை நானே..
எனதருமைக் கண்ணாடியே!!!
No comments:
Post a Comment